Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


நாகராஜா சசிதரன்

நாகராஜா 
சசிதரன்

Date of Birth: 8th March, 1962 - Deceased: 26th August, 2023

மகாஜனாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் கனடா மகாஜன பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாகராஜா சசிதரன் இலங்கையில் இடம்பெற்ற அவரது வகுப்பு ஒன்றுகூடலில் நண்பர்களோடு இருக்கையில் காலமானார்.
 
1971ம் ஆண்டு நான்காம் வகுப்பில் மகாஜனாவில் இணைந்து கொண்ட சசி, விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர்களான சிறீதரன், கிரிதரன் ஆகியோரும் சகோதரியும் மகாஜனாவில் இணைந்து கொண்டனர். 
 
சசி மகாஜனாவின் 17, 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளின் தொடக்க வேகப் பந்து வீச்சாளராக விளங்கினார். அந்த காலத்தில் மகாஜனா கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிகளில் சசிக்கும் பங்குண்டு.
 
சசியைப் போலவே அவரது தம்பிகளும் விளையாட்டில் பிரகாசித்தவர்கள்.
 
மகாஜனாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரனுக்கு எங்களுடைய அஞ்சலி! 
 
மகாஜன பழைய மாணவர் சங்கம் (UK)

Funeral Details:
 
VISITATION: 
Date:         Monday, September 4, 2023
Time:        8:00 am to 10:30 am
Location:  Chapel Ridge Funeral Home
Address:   8911 Woodbine Avenue
                   Markham, ON L3R 5G1
                   Canada
 
SERVICE: 
Date:         Monday, September 4, 2023
Time:        10:30 am to 12:00 pm
Location:  Chapel Ridge Funeral Home
Address:   8911 Woodbine Avenue
                   Markham, ON L3R 5G1
                   Canada
 
CREMATION & WITNESSING: 
Date:         Monday, September 4, 2023
Time:        1:00 pm
Location:  Highland Hills Crematorium
Address:   12492 Woodbine Avenue
                   Gormley, ON L0H 1G0
                   Canada