
Date of Birth: 18th February, 1951 - Deceased: 20th August, 2024
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கநாதன் சொர்ணதேவி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஐக்கிய இராச்சியம், மகாஜன பழைய மாணவர் சங்கத்தின் IT Coordinator ஆக செயல்படும் திரு ரமணனின் தாயார் ஆவார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராயர் ராமசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகராயர் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொக்கநாதன் (தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, மயூரநாதன், சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீரமனா (லண்டன்), பிரகாமி (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநேசன், சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா, கர்சிகா, லகாரிக்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:
விசாலாட்சி பாடசாலை வீதி,
மல்லாகம்.