Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

12 வயது பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரி அணி சாம்பியனாகியுள்ளது.

9th December, 2023

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் யாழ்.மாவட்ட மட்டத்தில் 12 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையே நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரி அணி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி 09-12-2023 அன்று சாவகச்சேரி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.