யாழ் மாவட்ட பெண்கள் அணியில் 14 வீராங்கனைகள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் மாணவிகள் சாதனை
14th October, 2025
வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் மாவட்ட அணி தேசிய ரீதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் உதைபந்தாட்ட போட்டிகள் பதுளையில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அணியானது காலிறுதிப் போட்டியில் அனுராதபுர மாவட்ட அணியையும், அரையிறுதிப் போட்டியில் களுத்துறை மாவட்ட அணியையும் இறுதிப் போட்டியில் குருநாகல் மாவட்ட அணியையும், எதிர் கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
யாழ் மாவட்ட அணி சார்பாக எமது தெல்லிப்பழை பிரதேச வீராங்கனைகள் பங்கு பற்றி சாதனை படைத்தமை மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். அத்துடன் யாழ் மாவட்ட பெண்கள் அணியில் 14 வீராங்கனைகள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் மாணவிகள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
இவ் அணியினை மிகவும் திறம்பட வழிநடத்திய பயிற்சியாளர் திரு.சாந்தகுமாா் அவா்களுக்கும் போட்டியில் பங்குபற்றிய சகல வீராங்கனைகளுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த சகல நல் உள்ளங்களுக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இந்த சாித்திர வெற்றியைப் பெற்றுத் தந்து நமது பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்த சகல உள்ளங்களையும்,
வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வலி வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.