Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

2024 ஆம் ஆண்டு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் தேசியமட்ட வெற்றியாளர்கள் கௌரவிப்பு

14th February, 2025

மகாஜனக் கல்லூரியில் கடந்த வருடம் 2024 இல் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் தேசியமட்டத்தில் வெற்றிவாகை சூடிய மாணவர்களை பாடசாலைச் சமூகம் நேற்று 14.02.2025 கௌரவித்தது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் வழிபாடுகளுடன் ஆரம்பித்து, தெல்ஙிப்பழைச் சந்தியிலிருந்து ஊர்வலமாக மாணவர்களும் பயிற்றுநர்களும் பொறுப்பாசிரியர்களும் அழைத்துவரப்பட்டனர்.
 
தேசியமட்டத்தில் வெற்றியாளர்களாக வலம்வந்த பெண்கள் உதைபந்தாட்ட அணிகள், மெய்வல்லுநர் வீரர்கள், பளுதூக்கல் வீரர்கள், தமிழ்மொழித்தினப் போட்டி மாணவர்கள், இரண்டாம்மொழி சிங்களதிப்போட்டி மாணவர், சர்வதேச கணித ஒலிம்பியாட் வெற்றாயாளர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.