Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வீரர்களின் போர் 2024 மகாஜனாவில் இன்று ஆரம்பம்

7th September, 2024

“வீரர்களின் போர்”  துடுப்பாட்டப் போட்டி 2024 இன்று சனிக்கிழமை மகாஜனாவில் ஆரம்பமாக இருக்கிறது.
 
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை (வெப்பம்) மாற்றம் காரணமாகவும் பாடசாலைகளின் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடைபெறவேண்டிய 
“ வீரர்களின் போர் “ என வருணிக்கப்படும் யா/மகாஜனக் கல்லூரியும், யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் மோதும் துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் யா/மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
அதேவேளை பழைய மாணவர்கள் மோதும் “நண்பர்களின் போர்” என வருணிக்கப்படும்  T/20 துடுப்பாட்டப் போட்டி 09.09.2024 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.