Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட தடகளப் போட்டி 2024 முதல் நாளில் துசாந்தன் தங்கப்பதக்கம்

18th October, 2024

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி 2024 கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் இன்று (18.10.2024) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 22.10.2024 வரை நடைபெறவுள்ளது.
 
இன்று முதல்நாள் நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி 1 தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது. 
 
ச.துசாந்தன் 20 வயது ஆண்கள் கோலூன்றிப்பாய்தல் போட்டியில் 4.30 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். வெற்றிபெற்ற வீரருக்கும் பயிற்றுநர்கள், பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!