Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

JSSA உதைபந்தாட்டப் போட்டியில் சாம்பியனானது மகாஜனக் கல்லூரி

2nd March, 2025

ஐக்கிய இராச்சிய தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தால் 16 வயதுப் பெண்களுக்கு நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத்தில் யா/மகாஜனக் கல்லூரி அணி சம்பியனானது.
இத்தொடரின் இறுதியாட்டம் இன்று 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
 
இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் பல நிமிடங்கள் சம பலத்துடன் மோதிய போதிலும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனை கல்ஷிகா இரு கோல்களை பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
 
இரண்டாவது பாதியாட்டத்திலும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியின் ஆதிக்கம் மேலோங்கிய போதிலும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியினர் மிகச் சிறப்பாக ஈடு கொடுத்து விளையாடினர். இருப்பினும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனை கல்ஷிகா மீண்டும் இரு கோல்களை பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
 
யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத் தலைவரான யா/கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் திரு.பெ.வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக  மகாஜனக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் தலைவருமான திரு.ம.மணிசேகரன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.