Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வலிகாமம் கல்வி வலய விளையாட்டு போட்டிகளில் சாம்பியனாகியது மகாஜனா

5th June, 2025

வலிகாம்ம் கல்வி வலய விளையாட்டுப்போட்டி இன்றைய (05.06.2025) இறுதிநாள் மெய்வல்லுநர் போட்டியுடன் நிறைவுபெற்றது. அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கிய நிலையில் (மெய்வல்லுநர், பெருவிளையாட்டுக்கள்) மகாஜனக்கல்லூரி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. அதற்கான வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
கடந்த மூன்று நாட்களாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வலிகாம்ம் கல்வி வலய  பாடசாலைகளுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இம்முறையும் மகாஜனா முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது. பெருவிளையாட்டு+மெய்வல்லுநர் ஆகிய இரண்டும் இணைத்து இம்முறை முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது  
 
இதற்கு அயராது உழைத்த அதிபர்,விளையாட்டுத்துறை முதல்வர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர், பயிற்றுநர் ஆகியோருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். 
 
  • 12 Girls Track champion  m. Karanihaa
  • 14 Girls Track champion T. Sakirththana
  • 14 Boys Track champion J. Kevinleethan
  • 16 Girls Track champion S. Kiyustikka
  • 16 Girls field Champion S.Sutharsika
  • 20 Boys field Champion J. Jenusin