Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மேசைப்பந்தாட்டத்தில் மகாஜனா சாம்பியன்

5th June, 2026

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரியின்
 
16 வயது ஆண்கள் அணி சாம்பியனாகியதுடன்.18 வயது பெண்கள் அணி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் தேசியமட்ட போட்டியில் பங்குபற்றவுள்ளன.
 
மேலும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் தனிநபர் போட்டியில் எமது கல்லூரி வீராங்கனை ஜவ்வனா விக்னமோகன் சாம்பியனாகியுள்ளார்.
 
இறுதி ஆட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனையை எதிர்கொண்ட ஜவ்வனா வெற்றிபெற்று சாம்பியனானார்.
 
அத்தோடு வடமாகாண பாடசாலைகளின் சிறந்த வீராங்கனையாகவும் ஜவ்வனா தெரிவாகியுள்ளார்.
இப்போட்டி 04.06.2026 நேற்றையதினம் யாழ்ப்பாணம் இந்துக் கல்்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.