Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வடமாகாண பாடசாலைகள் கராத்தே போட்டியில் மகாஜன மங்கை மிஷாஜினி சிறந்த வீராங்கனை

8th June, 2026

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் 20 வயது பெண்கள் பிரிவில் பங்குபற்றிய மகாஜனக் கல்லூரியின் ஐ.மிஷாஜினி வடமாகாண பாடசாலைகளின் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் 20 வயது பெண்கள் பிரிவு கராத்தே போட்டியில் கட்டா நிகழ்விலும் குமுத்தே நிகழ்விலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இப்போட்டி இன்று 08.06.2026 யா/அருணோதயக் கல்லூரியில் நடைபெற்றது.