மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் 2024
20th July, 2024
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் 2024 எதிர்வரும் 10-08-2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பழைய மாணவர் தாய்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஒன்றுகூடலில் உள்நாட்டு, புலம்பெயர் நாடுகளில் வாழும் சகல பழைய மாணவர்களும் பங்குபற்றும் உலகளாவிய ஒன்றுகூடலாக 2016 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது.
இந்த ஒன்றுகூடலுக்கான நுழைவுச்சீட்டு ரூபா 1000 ஆகும். இராப்போசன ஒழுங்கமைப்பும் உண்டு. பாடசாலைப்பருவ பிள்ளைகளுடன் கலந்துகொள்பவர்கள் கணவன் - மனைவி என இரு நுழைவுச்சீட்டுக்களைப் பெறவேண்டும். வளர்ந்த - பாடசாலைப்பருவத்தை தாண்டிய பிள்ளைகளுடன் கலந்துகொள்பவர்கள் தனித்தனியே ஒவ்வொருவரும் நுழைவுச்சீட்டுக்களைப் பெறவேண்டும்.
மகாஜன மாதாவின் வளர்ச்சிக்காகவும் பழைய மாணவர்களின் மகிழ்ச்சிக்காகவும் மகாஜனன்களாகிய நாம் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிப்போம்.
பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினர்களிடமும் பாடசாலையிலும் நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்