15th July, 2024
தேசியமட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் எமது பாடசாலை மாணவி சி.சுகர்ணா இன்று நடைபெற்ற 20 வயது பெண்கள் பிரிவு கோலூன்றிப்பாய்தலில் 3.20 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாமிடம் பெற்றுள்ளார். இப்போட்டி கொழும்பு தியகம மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.
