மாகாண உதைபந்தாட்டப்போட்டியில் மகாஜனா பத்தாவது வருடமாக சாம்பியன்
29th June, 2025
2025ஆம் ஆண்டிற்கான மாகாணமட்ட பெருவிளையாட்டுக்கள் வரிசையில் பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி கடந்த 25,26 திகதிகளில் யா/ வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. எமது கல்லூரியின் 17,20 வயதுப் பெண்கள் அணிகள் இரண்டும் சாம்பியன்களாகி கல்லூரிக்கு பெருமை சேர்த்தன.
17 வயதுப் பெண்கள் அணி இறுதிப்போட்டியில் யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடி 5;:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மாகாணச் சம்பியனாகியது. 17 வயது பெண்கள் அணி தொடர்ந்து நான்காவது வருடமாக மாகாணச் சம்பியனாகியுள்ளது. 17 வயதுப் பெண்களுக்கான போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 இல் இருந்து தொடர்ச்சியாக சாம்பியனாக வலம்வருகின்றது.
20 வயதுப் பெண்கள் அணி இறுதிப்போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரி அணியை எதிர்கொண்டது. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மாகாணச் சம்பியனாகியது. இப்போட்டியில் சிறந்த வீராகனையாக மகாஜனக்கல்லூரி மாணவி செல்வி தரணிகா தெரிவு செய்யப்பட்டார். 20 வயதுப் பெண்கள் அணியானது இவ்வருடத்துடன் தொடர்ந்து பத்தாவது வருடமாக மாகாணச் சம்பியனாகியுள்ளது. அதாவது 2014 ஆம் ஆண்டு தொடக்கம் (2020,2021 களில் கொவிட் 19 தொற்றுநோய் பரவல் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை) மாகாணச் சாம்பியனாக வலம்வருகின்றது.