Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜனன் கணித, விஞ்ஞானப் போட்டி பெறுபேறுகள்

31st December, 2024

மகாஜனன் சட்டத்தரணி இ. செல்வஸ்கந்தன் அவர்களால் அமரர்களான திருமதி சௌபாக்கியவதி இராஜரட்ணம், திருமதி பத்மபாஷினி செல்வஸ்கந்தன் ஞாபகார்த்தமாக வருடாவருடம் தரம் 9 மாணவர்களுக்காக மாகாண மட்டத்தில் நடாத்தப்படும் மகாஜனன் கணித, விஞ்ஞானப் போட்டியின் இந்த வருட முடிவுகள் வெளியாகி உள்ளன.

வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் உரிய பாடசாலைகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இப்பரீட்சையில் 1796 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் இரண்டு பாடங்களிலுமாக 50 மாணவர்கள் பரிசு பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்!