இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனன்கள் மூவர்
14th October, 2024
தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்து வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியுள்ளனர்.
பாஸ்கரன் சானு, சிவநேசன் தர்மிகா, சுரேந்திரன் கௌரி ஆகிய மகாஜனன்களே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இத்தொடர் நேபாளத்தில் இம்மாதம் (ஒக்டோபர்) 17 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இவர்கள் மூவரும் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கு தலைமைதாங்கியதோடு, பாடசாலைப் பருவத்தில் வயதுப் பிரிவுகளுக்கான தேசிய அணிகளிலும் இடம்பிடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சால் நடாத்தப்படுகின்ற பாடசாலைமட்ட உதைகந்தாட்டத்தில் மகாஜனக் கல்லூரி 20 வயதுப பெண்கள் அணி 2019 இல் முதன்முறையாக சாம்பியன்பட்டம் வென்ற போது, தர்மிகா அணித்தலைவியாகவும் கௌரி அணி உபதலைவியாகவும் சானு முன்னாள் அணித்தலைவியாகவும் சிறந்த பங்களிப்பை நல்கினர்.
இவர்கள் மூவருக்கும் கல்லூரிச் சமூகம் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.