Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டியில் மகாஜனா கல்லூரி 18 வயது பெண்கள் இறுதிப்போட்டியில்.

25th February, 2024

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மகாஜனா தகுதிபெற்றுள்ளது. இப்போட்டி அனுராதபுரத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டி 09.03.2024 இல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
 
அரையிறுதியாட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட மகாஜனா 7:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
 
இறுதிப்போட்டியில் களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை சந்திக்கின்றது.