Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்டத்தின் இறுதியாட்டங்களில் மகாஜன அணிகள்

13th October, 2024

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப்பிரிவு, 20 வயதுப்பிரிவு பெண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளின் இறுதியாட்டங்களில் மகாஜனக் கல்லூரி அணிகள் மோதவுள்ளன.
 
17 வயது அணி குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி அணியுடனும்,
 
20 வயது அணி பொலன்றுவை பென்டிவெவ கல்லூரியுடனும் நாளை 14.10.2024 காலை மோதவுள்ளன.
 
இப்போட்டி பொலன்றுவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 11.10.2024 தொடக்கம் நடைபெற்றுவருகின்றது.
 
நாளையதினம் நடைபெறும் இறுதியாட்டங்களில் இரு அணிகளும் வெற்றிபெற்று தேசிய சாம்பியன்களாக வலம்வந்து கல்லூரிக்கு பெருமைசேர்க்க வாழ்த்திநிற்கின்றோம்.