Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வடமாகாண தடகளப் போட்டி 2023 மகாஜனா முன்னிலை பெற்றது

10th September, 2023

 
வடமாகாண தடகளப் போட்டி 2023 - மகாஜனா முன்னிலை பெற்றது.
 
9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் மொத்தம் 22 பதக்கங்கள்
 
ஆண்கள் 78 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடம்,
பெண்கள் 100 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடம்,
மொத்தம் 178 புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலை
 
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தடகளப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 10.09.2023 நிறைவிற்கு வந்தது. இப்போட்டியில் வழமை போன்று மகாஜனக் கல்லூரி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 22 பதக்கங்களுடன் 178 புள்ளிகளைப் பெற்று முதன்மைநிலை பெற்றது. 
 
வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களில் வலிகாமம் கல்வி வலயம் 669 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்றது. இதற்கு 178 புள்ளிகளைப் பெற்று மகாஜனக் கல்லூரி பெரும் பங்காற்றியது.