Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் மகாஜனா மாணவன் டினேசன் பங்கேற்பு

21st August, 2024

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யா/மகாஜனக் கல்லூரி தரம் 6 மாணவன் கஜபதி டினேசன் Category-1 இல் தகுதிபெற்றுள்ளார். 
 
இம்மாணவன் சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவுசெய்ய நடாத்தப்பட்ட  Category-1 பரீட்சையில் நான்காம்  இடம்பெற்றுள்ளார். இந்த பரீட்சையில் முதல் 6 இடங்களுக்குள் இடம்பெற்ற மாணவர்கள் சர்வதேசப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்கள்.
 
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ளது. 
 
வெற்றிபெற்ற மாணவனுக்கும் வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!