Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

பொலிஸ் மாணவ படையணியின் உத்தியோகத்தர்களாக பதவி உயர்வு

28th August, 2024

மாணவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரம் பெறாத உத்தியோகத்தர்களாக எமது கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி உள்ளனர்.
 
அவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் கடந்த மாதம் 25/07/2024 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள சிப்பாய்கள் படையணியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 
 
இதில் எமது கல்லூரியைச் சேர்ந்த பாரதிதாசன் ஜிந்துஜன் PC/B/007 CSM பதவியில் இருந்து  RSM ஆக double promotion மூலம் பதவி உயர்த்தப்பட்டார். இப் பதவி   மாணவ படையணியின் உயர் பதவி மற்றும் மாவட்ட நிலையில் அதிகாரம் வாய்ந்த பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எமது பாடசாலையை சேர்ந்த மற்றுமொரு மாணவன் பாலேந்திரா பிரகீஷ் PC/B/0060 SGT பதவியில் இருந்து trible promotion  மூலம் RQ ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இப் பதவியானது மாணவ படையணியின் இரண்டாம் உயர் நிலை பதவி என்பது குறிப்பிடத்தக்கது.