மாகாணமட்ட தடகளப் போட்டி 2024 மகாஜனாவிற்கு முதல் நாளில் இரு பதக்கங்கள்
20th August, 2024
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி 2024 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (20.08.2024) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 24.08.2024 சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி 1 தங்கம், 1 வெள்ளி என இரு பதக்கங்களைப் பெற்றுள்ளது.
S. மரியஹர்சின் 20 வயதுப் பெண்கள் குண்டு போடுதல் போட்டியில் தங்கப்பதக்கமும், Y. உமாசங்கவி
16 வயதுப் பெண்கள் தட்டெறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும் பயிற்றுநர்கள், பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!