மாகாணமட்ட தடகளப் போட்டி 2024 மகாஜனாவிற்கு இரண்டாம்நாள் மூன்றுபதக்கங்கள்
21st August, 2024
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி 2024 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (20.08.2024) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 24.08.2024 சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இன்றைய இரண்டாம் நாள் நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி 1 தங்கம், 1 வெள்ளி , 1 வெண்கலம் என மூன்று பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ச.துசாந்தன் 20 வயது ஆண்கள் பிரிவு கோலூன்றிப்பாய்தலில் தங்கப்பதக்கமும்,
சி.சுவர்ணா 20 வயதுப் பெண்கள் பிரிவு நீளம் பாய்தலில் வெள்ளிப்பதக்கமும்,
டனுசன் 20 வயது ஆண்கள் பிரிவு கோலூன்றிப்பாய்தலில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
இன்றுடன் மகாஜனாவின் பதக்கங்கள் 5 ஆக உயர்வடைந்துள்ளன.
வெற்றிபெற்ற வீரர்களுக்கும் பயிற்றுநர்கள், பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!