Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மாகாணமட்ட தடகளப் போட்டி 2024 மகாஜனாவிற்கு மூன்றாம் நாள் 5 பதக்கங்கள்

22nd August, 2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி 2024 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (20.08.2024) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 24.08.2024 சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
 
இன்றைய மூன்றாம் நாள் நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 
 
ச.துசாந்தன் 20 வயது ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் தங்கப்பதக்கமும், 
ஜெ.ஜெனுசின் 18 வயது ஆண்கள் பிரிவு குண்டுபோடுதலில் வெள்ளிப்பதக்கமும்,
ரி.ஆரதி 16 வயதுப் பெண்கள் பிரிவு உயரம்பாய்தலில் வெண்கலப்பதக்கமும், 
18 வயது ஆண்கள் 4*100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப்பதக்கமும், 
20 வயது ஆண்கள் 4*100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
 
இன்றுடன் மகாஜனாவின் பதக்கங்கள் 10 ஆக உயர்வடைந்துள்ளன.
 
வெற்றிபெற்ற வீரர்களுக்கும் பயிற்றுநர்கள், பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!