மாகாணமட்ட தடகளப் போட்டி 2024 மகாஜனாவிற்கு ஐந்தாம் நாளில் இரு பதக்கங்கள்
24th August, 2024
மாகாணமட்டப் போட்டியில் மொத்தம் 13 பதக்கங்களை மகாஜனக் கல்லூரி பெற்றுள்ளனர்.
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி 2024 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 20.08.2024) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 24.08.2024 சனிக்கிழமை இன்று வரை நடைபெற்றது
இன்றைய ஐந்தாம் நாள் நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. S. மரியஹர்சின்
20 வயதுப் பெண்கள் தட்டெறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும் சு.தசாரகன் 18 வயது 110M தடைதாண்டல் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
2024 மாகாணமட்ட தடகளப் போட்டியில் மகாஜனக் கல்லூரி 13 பதக்கங்களை பெற்றுள்ளது.
வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும் பயிற்றுநர்கள், பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!