19 வயது பிரிவினருக்கான Tier B இல் மகாஜனக்கல்லூரி அணி வெற்றி
11th February, 2024
இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் 19 வயது பிரிவினருக்கான Tier B இல் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் மகாஜனக்கல்லூரி அணி யூனியன் கல்லூரி அணியை எதிர்கொண்டது முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா 50 ஓவர் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 295 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பில்.
S. கஜித் 80
ரகசியன் 50
லகீசன் 29
சுமிஸ்கரன் 21
கோகுலநாத் 21
அபிஷாந் 20
ஓட்டங்களை பெற்று கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பாடிய யூனியன் கல்லூரி 35.5 ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்று கொண்டது..
பந்துவீச்சில்..
யோவேல்ரொஷான் 3 துளசிகன் 2
லகீசன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
மகாஜனா 174 ஓட்டங்களினால் வெற்றியை பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியது.