தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் ஶ்ரீவித்தியா முதலாமிடம்
27th September, 2024
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பளு தூக்குதல் போட்டியில் 17வயதுப் பெண்கள் பிரிவில் 71kg எடைப் பிரிவில் ஶ்ரீவித்தியா 100kg எடை தூக்கி முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி பொலனறுவை இராஜகிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்றுவருகின்றது.
வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுநருக்கும் வாழ்த்துக்கள்!