மேசைப்பந்தாட்டத்திலும் சாதனை படைத்தது மகாஜனக் கல்லூரி ஆண்கள் அணி
20th July, 2024
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான இன்று 20.07.2024 நடைபெற்ற மேசைப்பந்தாட்ட போட்டியில் எமது பாடசாலை 16 வயது அணி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியுடன் மோதி இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்த்த இப் போட்டியானது ஐந்தாவது செற்வரை நீன்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மகாஜன மாணவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர்.
நேற்று 19.07.2024 நடைபெற்ற 16 வயதுப் #பெண்களுக்கான போட்டியில் வடமராட்சி மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையுடன் மோதி சாம்பியனாகியது.
இம்முறை முதலாவது தடவையாக ஆண்கள்,பெண்கள் என இரு பிரிவுகளிலும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து, தேசிய மட்த்திற்கு தெரிவாகியுள்ளது.
இப்போட்டிக்கு ஒத்துழைப்பு நல்கிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பம் முதல் இன்றுவரை சிறப்பாக பயிற்சிகளை வழங்கிவரும் பயிற்றுநர் திரு. செ. ஹரிப்பிரகாஸ் , பொறுப்பாசிரியர் திரு.சி.ரங்காதரன்,எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டுத்துறை முதல்வர் திரு. ந. திலகராஜ் ஆகியோருக்கு சிறப்பான நன்றிகள். மேசைப்பந்தாட்டத்தை எமது கல்லூரியில் ஆரம்பித்துவைத்த ஓய்வுநிலை அதிபர் திரு.ம.மணிசேகரன் அவர்களை நன்றியுடன் பாராட்டுகின்றோம். மேலும் இப்போட்டியில் சிறப்பாக தொடர் பயிற்சிகளை பெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் அவர்களுக்கு ஊக்கமளித்து ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் வாழ்த்துகின்றோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மேசைப்பந்தாட்டத்திற்கு அனுசரணை வழங்கி, பயிற்றுநருக்கு தொடர்ந்து வேதனம் வழங்கிவரும் 1991 A/L பிரிவு பழைய மாணவர் அணிக்கு சிறப்பான நன்றிகள்.
தேசியத்திலும் வெற்றிபெற்று சாதனைபடைக்க வாழ்த்துகின்றோம்.